மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் குறித்து அவுஸ்திரேலியாவின் நிலைப்பாடு
மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதலை நிறுத்தும் நிலையில் தமது நாடு இல்லை என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் (Australia) பேர்த் (Perth) நகரத்தில் இன்று (09) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அல்பானிய அரசாங்கம் பலஸ்தீனம் மீதான அதன் நிலைப்பாட்டிற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
அமைதியின் நலன்
இந்தநிலையில், காசா போரில் தாம் எந்தவித பங்கும் வகிக்கவில்லையென்றும், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்று கூறியுள்ளார்.
காசா போர் தொடர்பில், “நாம் செய்யக்கூடியது அமைதியின் நலன்களுக்காக குரல் எழுப்புவதும் ஒவ்வொரு அப்பாவி உயிரின் இழப்பையும் குறைப்பதும்தான்” என அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க, அவுஸ்திரேலியாவில் உள்ள பலஸ்தீனிய ஆதரவு போராட்டக்காரர்கள், காசா மீதான போருக்கு இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு அல்பானிய அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
[ALEF4GC ]
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |