கூந்தல் பிரச்சினைகள் அத்தனைக்கும் ஒரே தீர்வு... ஒரு எண்ணெய் போதும்..!
உலகில் உள்ள அனைவருக்கும் இருக்கும் முக்கியமான பிரச்சனைகளில் கூந்தல் சார்ந்த பிரச்சனைகளும் ஒன்று.
கூந்தல் உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு கூந்தல் பிரச்சனைகளை அன்றாடம் சந்தித்து வருகின்றோம்.
இந்த பிரச்சினைகளைத் தீர்த்து, இயற்கையான முறையிலேயே முடி வளர்ச்சியை அதிகரிக்க அவகோடா எனப்படும் ஆனைக்கொய்யா எண்ணெய் பாரிய அளவில் உதவுகின்றன.
ஈரப்பதத்தை வழங்குகிறது
ஆனைக்கொய்யா எண்ணெயில் உள்ள விட்டமின் B மற்றும் விட்டமின் E சத்து கூந்தலுக்கு நல்ல வலிமையை தருகிறது. இதனால் முடி உதிர்வு பிரச்சினையை தடுக்கலாம்.
இந்த ஆனைக்கொய்யா எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நம் தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்குகிறது.
மேலும் ஆனைக்கொய்யா எண்ணெயை தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து வந்தால் பொடுகு தொல்லை நாளடைவில் குணமாகும் என்றும் கூறப்படுகிறது.
முடி உதிர்வு
ஆனைக்கொய்யா எண்ணெயை சிறிதளவு புதினா எண்ணெய் அல்லது ரோஸ்மேரி எண்ணெயுடன் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வு பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.
மேலும் இந்த ஆனைக்கொய்யா எண்ணெய் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் தலைமுடி வளர்ச்சியும் வலுவடையும்.
தலை முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இந்த ஆனைக்கொய்யா எண்ணெயில் நிறைந்துள்ளாதல் தாராளமாக தலைமுடிக்கு பயன்படுத்த்தி நல்ல பலன்களை பெற்றுக்கொள்ள முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |