உடல் சூட்டுக்கு உகந்த தீர்வு..! சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய்
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் தற்போது கோடை காலத்தின் தாக்கம் அதிகளவில் உணரப்படுகிறது.
இதனால் மக்கள் உடல் ரீதியில் பல உபாதைகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், உடல் சூட்டை குறைப்பதற்கான உணவுப்பொருட்களை உட்கொள்வதும் பானங்களை பருகுவதும் சிறந்தது என வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பரிந்துரைக்கப்பட்டும் வெள்ளிரிக்காய்
இதன்படி, கோடை காலத்தில் அதிகம் உட்கொள்ள வேண்டிய காய்கறியாக வெள்ளரிக்காய் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வெள்ளரிக்காயில் பரந்த அளவான நன்மைகள் இருக்கின்றன. கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுகிறது.
இயற்கையாகவே அதிகளவான தண்ணீரைக் கொண்ட வெள்ளரிக்காய், மனித உடலின் திரவ உட்கொள்ளலை அதிகரிப்பதோடு உடலை குளிர்ச்சியாக்குகிறது.
மேலதிக நன்மைகள்
தண்ணீரைத் தவிர, வெள்ளரிக்காய்களில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வெள்ளரிகளில் விட்டமின் கே மற்றும் சி மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.

இது எலும்பின் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
அத்துடன், உடல் எடையை குறைக்கவும் வெள்ளரிக்காய் உதவுகிறது. வெள்ளரிக்காய் துண்டுகளை சாப்பிடுவது பசி திருப்தியை அதிகரிக்கவும், கலோரிகள் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதைத் தடுக்கவும் உதவுகிறது.
எரிகாயங்களுக்கு மருந்து
வெயில் சூடு காரணமாக உடலில் ஏற்படும் காயங்களையும் வெள்ளரித் துண்டுகளின் உதவியுடன் குளிரூட்ட முடியும். இதனால், சூரிய ஒளியில் எரிந்த சருமத்தை காயமாற்றி, வீக்கம் மற்றும் அசௌகரியத்தைக் குறைக்கு முடியும்.

வெள்ளரிக்காய் துண்டுகள் அல்லது வெள்ளரிக்காய் உள்ள பொருட்களைப் பயன்படுத்துவது சூரிய வெப்பம் தொடர்பான தோல் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்