இலங்கையின் நண்பன் இந்தியா! வழங்கப்பட்ட உறுதி
இலங்கையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆதரவளிப்பதற்கும் இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்குமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உறுதியளித்துள்ளார்.
அதேநேரம், இலங்கையின் பாதுகாப்பு படையினரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (10) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நண்பர்
இலங்கையின் நம்பிக்கைக்குரிய மற்றும் எப்போதும் சார்ந்திருக்கக்கூடிய நண்பராக இந்தியா தொடர்ந்தும் திகழும் என சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இரண்டு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவு விரிவடைந்து மற்றும் பரவலடைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய, பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, கல்வி, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மேலும் மேம்படுத்தப்படவுள்ளதாக சந்தோஷ் ஜா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |