வலுக்கட்டாய நாடுகடத்தல் திட்டத்தில் திருச்சி சிறப்பு முகாம்: ஈழ குரல்களுக்கு செவிசாய்க்க தயங்கும் தமிழக அரசு
அண்மையில் தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து முன்னாள் பேராளியான 50 வயதான கிருஷ்ணகுமார் கந்தசாமி, இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தார்.
இதையடுத்து, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் (TID) 72 மணி நேரத் தடுப்புக்காவல் மற்றும் விசாரணைக்குப் பின்னர் அவர் 29 ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் சிறப்புமுகாமில் உள்ள சுபாஸ்கரன் உட்பட்ட முன்னாள் போராளிகளை நாடுகடத்துவதற்கான நர்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு வற்புறுத்தி விருப்பமின்றி ஒருவரை நாடு கடத்துவது தொடர்பில் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சென்னை உயர் நீதிமன்ற சட்டவாளரும், தமிழ் சட்டவாளர் பேரவை நிறுவனருமான ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தமிழக அமைச்சர் வன்னியரசு இந்த விடயத்தில் அழுத்தத்தை பிரயோகித்து வருவதாகவும் மற்றும் அமைச்சரவையில் இவ்விடயம் குறித்து தொடர்ச்சியாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழக முதல்வர் விஜய்யிற்கும் இவ்வாறு நாடு கடத்தப்படுவது குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தமிழ் தேசியமும் திராவிடமும் இரு கண்கள் என கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய முதல்வரின் ஆட்சியில் இவ்வாறு நடைபெறுவது ஈழத்தமிழர்கள் மத்தியிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது கீழுள்ள காணொளி....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |