2026 வாக்காளர் பதிவேடு : யாழ் மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 6ஆக குறைப்பு!
2026ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவேட்டை இலங்கை தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, இலங்கையில் வாக்களிக்க தகுதியுள்ள வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 17,641,006 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது 2025ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடுகையில் 90,835 வாக்காளர்கள் அதிகரிப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஆசனங்கள்
தேர்தல் தொகுதிகளுக்கிடையிலான வாக்காளர் விகிதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இட ஒதுக்கீட்டை தேர்தல் ஆணைக்குழு மாற்றியமைத்துள்ளது.
அதற்கமைய கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் தலா 18இலிருந்து 19இஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 7இலிருந்து 6ஆகவும், பதுளை மாவட்டத்திற்கான ஆசனங்கள் 9இலிருந்து 8ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன.
மக்கள் தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் சட்டபூர்வ சமநிலையைப் பேணுவதற்காக வாக்காளர் பட்டியலில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருத்தப்பட்ட இந்த இட ஒதுக்கீடு விபரங்கள் அனைத்தும், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |