புத்தாண்டு விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
Sinhala and Tamil New Year
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Laksi
தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயத்தை அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
பொது விடுமுறை
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக அறிவித்து தற்போது அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்