இத்தாலியில் வெடித்த போராட்டம்: 40 நகரங்களில் ஸ்தம்பித்த மக்கள் வாழ்க்கை
இத்தாலியில் நாடு முழுவதும் பாரிய மக்கள் போரராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, குறைந்த ஊதியம் மற்றும்
பொதுச் சேவைகளை வலுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தப் போராட்டத்திற்கு அடித்தளத் தொழிற்சங்கமான USB (Unione Sindacale di Base) அழைப்பு விடுத்திருந்தது.
வலுக்கட்டாய நாடுகடத்தல் திட்டத்தில் திருச்சி சிறப்பு முகாம்: ஈழ குரல்களுக்கு செவிசாய்க்க தயங்கும் தமிழக அரசு
பணிநிறுத்தம்
இதனடிப்படையில் 24 மணிநேர நாடளாவிய பொது பணிநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டதுடன் 40 இற்கும் மேற்பட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

துரின் நகரில் காவல்துறையினர் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்தனர்.
ரோம் நகரில் கொலோசியம் அருகே பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள், நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்றபோது காவல்துறையினருடன் பதற்றம் ஏற்பட்டது.
இதன்போது எட்டு பேர் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டக்காரர்கள்
அத்தோடு மிலான் நகரிலும் போராட்டக்காரர்கள் நகரின் பிரதான சுற்றுவீதியில் பேரணியாகச் சென்றனர்.
அதேவேளை, ஜெனோவா துறைமுகத்திற்குள் சுமார் 15,000 தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மோதல் பகுதிகளுக்கு ஆயுதங்களை அனுப்புவதற்கு துறைமுகங்களைப் பயன்படுத்த எதிர்ப்புத் தெரிவிப்பதும் இந்தப் போராட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.
இதற்கிடையில், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் மற்றும் அல்பேனியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |