வங்கக்கடலில் நாளை உருவாகிறது முரசு புயல்
வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக, நாளை(01.10) புதிய புயல் ஒன்று உருவாகவுள்ளதாகவும், அதற்கு 'முரசு' புயல் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மிக அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள இந்த வானிலை அமைப்பு அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடைந்து புயலாக உருவெடுக்கும் என்பதால் கடலோரப் பகுதிகள் தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அடுத்த 24 மணி நேரத்தில் முரசு புயல்
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேலும் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் (நாளை ) அதிதீவிரமடைந்து முரசு புயலாகவும் உருமாறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |