முழுமையான மன குழப்பத்தில் எதிர்கட்சியினர்: ஆரம்பமாகும் வெறுப்புப் பிரச்சாரங்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை எதிர்க்கட்சியினரால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடுமையாக சாடியுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
"தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மற்றும் சமூகப் பரிணாம மாற்றம் எதிர்க்கட்சியினரின் சுகபோக வாழ்க்கைக்கோ, உடலுக்கோ அல்லது மனதுக்கோ இன்னும் பழகவில்லை.
குழப்பத்தில் எதிர்கட்சியினர்
அதேபோல், அவர்களின் அரசியலும் இந்த மாற்றத்திற்குத் தயாராக இல்லை. இதன் காரணமாகவே, அவர்களால் இந்த புதிய சூழலைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மந்தநிலையிலும் குழப்பத்திலும் தவித்து வருகின்றனர்.

இந்த அரசியல் மாற்றத்திற்கு முகம் கொடுக்க முடியாத விரக்தியினால், அவர்கள் என்ன பேசுவது, எப்படி விமர்சிப்பது என்று தெரியாமல் தங்களின் மனதை முழுமையாகக் குழப்பிக் கொண்டுள்ளனர் .
இதன் விளைவாகவே, அவர்கள் தற்போது வெறுப்புப் பிரச்சாரங்களையும், போலியான வதந்திகளையும் பரப்பி வருகின்றனர்" என மேலும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |