எதிர்க்கட்சிகளின் பில்லி சூனிய அரசியல்...! மேடையில் கிண்டலடித்த ஜனாதிபதி
நாட்டின் தற்போதைய அரசியல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினர் பில்லி சூனிய வழிபாடுகளில் இறங்கியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சாடியுள்ளார்.
தேசிய அறிவுஜீவிகள் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
விரக்தியின் உச்சக்கட்டமாக, எதிர்க்கட்சியினர் இவ்வாறு விசித்திரமான மற்றும் விகாரமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வலுக்கட்டாய நாடுகடத்தல் திட்டத்தில் திருச்சி சிறப்பு முகாம்: ஈழ குரல்களுக்கு செவிசாய்க்க தயங்கும் தமிழக அரசு
களிமண் பொம்மை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
திடீரென ஒரு களிமண் பொம்மையைச் செய்து அதற்குள் ஊசிகளை அல்லது முட்களைக் குத்தும் செயல்களில் அவர்கள் இறங்குகிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த களிமண் பொம்மைக்கு முட்களைக் குத்துவதன் மூலம் தனக்கு தீங்கு விளைவிக்கலாம் என்று அவர்கள் நம்புவதாகக் கூறிய அவர், இப்படி களிமண் பொம்மைக்கு முள் குத்தி பழிவாங்க நினைப்பதற்கு ஒரு மனிதனுக்கு எத்தகைய விகாரமான மனநிலை இருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.
முறையான கொள்கையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட அரசியல் போராட்டங்கள் நாட்டிற்கு வலுசேர்க்குமே தவிர ஒருபோதும் ஆபத்தை ஏற்படுத்தாது என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று களிமண் பொம்மையைத் தேடும் இவர்கள், நாளை பாம்பு தடி போன்ற மூடநம்பிக்கைப் பொருட்களைக் கொண்டு சமூகத்தில் ஒரு தற்காலிக அராஜக நிலையை உருவாக்க முயல்கிறார்கள், இதுவே தற்போதைய ஒரே ஆபத்தாகும் என எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |