புத்தாண்டுக்கான சுபவேளை குறிப்பு பத்திரம் ரணிலிடம் கையளிப்பு!
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கான சுபவேளை குறிப்பு பத்திரம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பிரதாய முறைப்படி கையளிக்கப்பட்டுள்ளது.
அதிபர் அலுவலகத்தில் வைத்து இன்று (10) புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அதிபருக்கு வழங்கி வைத்தார்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச சுபநேர கணிப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்ட சுபவேளை குறிப்புப் பத்திரமே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.
சுபவேளை குறிப்பு பத்திரம்
இந்த சுபவேளை குறிப்புப் பத்திரத்தில் புத்தாண்டு பிறப்பு, புண்ணிய காலம், உணவு சமைத்தல், அடுப்பு பற்றவைத்தல், உணவு உண்ணல், தலைக்கு எண்ணெய் தேய்த்தல், புத்தாண்டில் வேலைக்குப் புறப்பட்டு செல்லுதல் உள்ளிட்ட சுப காரியங்களுக்கான சுப நேரங்கள் என்பவை குறிப்பிடப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, அதிபர் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |