ரணில் மீதான விசாரணை குறித்து ஆனந்த விஜேபாலவின் அதிரடி அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) எதிராகத் தொடரப்பட்டுள்ள நிதி மோசடி வழக்கு தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த வழக்கில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது லண்டனிலுள்ள வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்திற்கு மேற்கொண்ட பயணம் தொடர்பானதே இந்த சர்ச்சையாகும்.
கைது செய்யப்பட்ட ரணில்
அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க கௌரவப் பட்டம் பெறும் நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற இந்தப் பயணம், ஒரு தனியார் பயணமாக இருந்தபோதிலும், சுமார் 16.6 மில்லியன் ரூபாய் முதல் 16.9 மில்லியன் ரூபாய் வரையிலான அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக 2025 ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, பின்னர் மருத்துவக் காரணங்களுக்காகப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சிஐடி சுதந்திரமாகச் செயல்படும் அதிகாரம் கொண்டது, சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என எதிர் தரப்பு சட்டத்தரணிகள் கருதினால், அதனை அவர்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்.
இந்த விவகாரத்தில் இறுதி முடிவை நீதிமன்றமே எடுக்கும். ஒவ்வொரு சிறிய விசாரணைக்கும் சட்டமா அதிபரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் சிஐடிக்கு இல்லை“ என குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்