இந்தியாவின் உதவியுடன் தலைமறைவான அசாத் மௌலானா
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஊடாக 2023 ஆம் ஆண்டளவில் திடுக்கிடும் பல செய்திகளை வெளியிட்ட ஹன்சிர் அசாத் மௌலானா (Hansir Azad Maulana) இந்தியாவின் (India) உதவியுடன் சுவிட்சர்லாந்தில் (Switzerland) தலைமறைவாகியுள்ளதாக பிரித்தானியாவில் (Britain) இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆருஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அப்போதைய ஜனாதிபதி (Maithripala Sirisena) குறித்த தாக்குதலின் பிண்ணனியில் இந்தியா இருப்பதாக அப்போதே அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், இந்தியாவிற்கும் மற்றும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் ஒரு நல்லுறவு இருப்பதனால் இது தொடர்பில் இரகசியமாக பலதரப்பட்ட நடவடிக்கைகைகள் மேற்கொள்ளப்படலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிண்ணனி, இதில் இந்தியாவின் வகிபங்கு மற்றும் தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணை குறித்தும் அவர் மேலும் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)