அசாத் சாலியின் கைது குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி (Azath Salley) கைது செய்யப்பட்டு தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் பிரதிவாதிகளுக்கு 75,000 ரூபா நட்டஈடு வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara), குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்டோர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆத் திகதி கைது செய்யப்பட்ட அசாத் சாலி 9 மாதங்களுக்கும் மேலாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் 2021 டிசம்பர் 2ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தால் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |