என்ன நடக்கும் 2026 இல்...! பாபா வங்காவின் அதிர வைக்கும்10 கணிப்புக்கள்
Astrology
Baba Vanga
World
By Shalini Balachandran
உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும் அவற்றில் பாபா வங்காவின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை மட்டுமல்ல அவரது கணிப்புகள் இதுவரை பொய்த்ததில்லை.
இந்தநிலையில், இவருடைய கணிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகி உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி வருகின்றது.
இதனடிப்படையில் இன்னும் ஒரு மாதத்தில் 2026 ஆரம்பமாகவுள்ள நிலையில், புதிய வருடம் குறித்து அவர் கணித்துள்ள விடயங்கள் தொடர்பில் எதிர்ப்பார்ப்புக்கள் கூடியுள்ளது.
பத்து கணிப்புகள்
அவ்வாறு கணித்த முக்கிய பத்து கணிப்புகள் தொடர்பில் இந்த பதிவில் பாரக்கலாம்.
- 2026 இல் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் மூலமாக மனித உறவுகளுக்குள் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மற்றும் மனிதர்களின் வாழ்க்கையில் அதிகம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் அளவிற்கு தொழிநுட்பம் வளர்ச்சி அடையும் எனவும் அவர் கணித்துள்ளார்.
- தங்கம் மற்றும் இதர மதிப்புமிக்க உலோகங்களின் விலையில் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி மாற்றம் வரும் என அவர் கணித்துள்ளார்.
- கடந்தாண்டை போலவே 2026 ஆம் ஆண்டிலும் ஒரு பெரும் உலகப்போர் தொடங்கும் என கணித்துள்ள பாபா வாங்கா,அந்த போரில் முக்கிய வல்லரசு நாடுகள் ஈடுபடும் எனவும் உலகெங்கும் உள்ள கண்டங்களில் இந்த போர் பதற்றம் பரவும் எனவும் கணித்துள்ளார்.
- கடந்த ஆண்டை போலவே வரும் 2026 ஆம் ஆண்டிலும் மாபெரும் இயற்கை பேரழிவுகள், பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படும் எனவும் அந்த பேரழிவால் ஏழு தொடக்கம் எட்டு சதவீதம் நிலப்பரப்பு பாதிக்கப்படும் எனவும் அவர் கணித்துள்ளார்.
- மோசமான காலநிலை மாற்றத்தால் வரலாறு காணாத வெள்ளம் மற்றும் தீவிர வறட்சி வானிலை ஏற்படும் எனவும் இதனால் பூமியின் மூன்றில் இரண்டு பங்கு சுற்றுச்சூழல் அமைப்பு மாறுபடும் எனவும் பாபா வாங்கா கணித்துள்ளார்.
- 2026 ஆம் ஆண்டு நவம்பரில் ஒரு பெரிய விண்வெளிக்கப்பல் பூமியை நோக்கி வரும் எனவும் இதன் மூலம் மனிதர்கள் வேறொரு உலகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி வேற்றுகிரகவாசிகளுடன் பேசுவார்கள் எனவும் அவர் கணித்துள்ளார்.
- 2026 ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து உலகின் அதிபதி என அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த தலைவர் உருவெடுப்பார் என அவர் கணித்துள்ளார்.
- அத்தோடு, கடலுக்கு கீழே பெரிய நகரம் கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக அவர் கணித்துள்ளார்.
- 2026 இல் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என பாபா வாங்கா கணித்துள்ளார்.
- சுற்றுச்சூழல், அரசியல் நெருக்கடி மற்றும் தொழில்நுட்ப ஆதிக்கம் போன்றவற்றால் 2026 ஆம் ஆண்டில் இடம்பெயர்வு மற்றும் அமைதியின்மை உலக நாடுகளிடையே அதிகரிக்கும் என அவர் கணித்துள்ளார்.

இந்தநிலையில், தற்போது குறித்த கணிப்புக்கள் பாரிய எதிர்ப்பார்ப்புக்களுடன் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 8 மணி நேரம் முன்
ஈழத் தமிழரின் அடையாளமாக பிரபாகரன் என்ற மந்திரப் பெயர்…
10 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி