தீ விபத்தில் சிக்கிய 06 மாத கைக்குழந்தை மரணம் - தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்
Sri Lanka Police Investigation
Accident
By pavan
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு தொரவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 06 மாத கைக்குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
குறித்த விபத்தானது குத்துவிளக்கினால் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கிய குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
குழந்தையின் பெற்றோர்
குழந்தைவின் குடும்பம் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒற்றை அறை போன்ற வீட்டில் வசித்து வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது குழந்தையின் பெற்றோர் அறைக்கு வெளியே இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்