அனாதைகளாக வெதுப்பக உரிமையாளர்கள் - கவலையுடன் வெளியான தகவல்
இரண்டு மூன்று நாட்களில் வெதுப்பக தொழில் முற்றாக வீழ்ச்சி
இன்று (ஜூலை 7) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 50% வெதுப்பகங்கள் தற்போது முற்றாக மூடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று வரை எந்த பலனும் இல்லை.
வெதுப்பக உற்பத்திக்குத் தேவையான எதையும் பெற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த எரிபொருள் பிரச்சினை குறித்து பிரதமர், மின்துறை அமைச்சர், வர்த்தக அமைச்சர் மற்றும் அனைவருக்கும் ஒரு மாதமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை எந்த பலனும் இல்லை.
வெதுப்பக தொழில் ஒரு அத்தியாவசிய சேவை என்று நான் நினைக்கிறேன். இன்றைய நிலையில் வெதுப்பகங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான எந்த திட்டத்தையும் யாரும் தயாரிக்கவில்லை.
அனாதைகளாக வெதுப்பக உரிமையாளர்கள்
வெதுப்பக உரிமையாளர்கள் முற்றிலும் ஆதரவற்றவராகவும் அனாதையாகவும் இருக்கிறார்கள்."
இது தொடர்பில் அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜயவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
