கொழும்பு துறைமுகத்திற்கு வந்த இந்திய கப்பலின் கப்டனுக்கு விதிக்கப்பட்ட தடை
Colombo
Port of Colombo
Sri Lanka Magistrate Court
By Jaso
கொழும்பு(colombo) துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக கூறப்படும் கப்பலின் கப்டன் ஒருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய கப்பல் ஒன்றின் கப்டன் ஒருவருக்கே கொழும்பு மேலதிக நீதவான் இந்த தடையை விதித்துள்ளார்.
கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு
குறித்த இந்திய(india) கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாக துறைமுக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், நீதிமன்றத்திற்கு அது தொடர்பான தகவல்களைதெரிவித்து, இந்தத் தடையை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் துறைமுக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி