கட்டுநாயக்கவில் சிக்கிய வெளிநாட்டவர்
போலி ஸ்பானிஷ் விசாவைப் பயன்படுத்தி வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் நாட்டவர் ஒருவர் இன்று (26) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் தனது அனுமதிக்கு தேவையான ஆவணங்களை கத்தார் ஏர்வேஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தார், அவர்கள் சந்தேகத்தின் பேரில்,கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவிடம் அவற்றை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர்.
ஸ்பானிஷ் விசா போலியானது
அங்கு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனைகளில் ஸ்பானிஷ் விசா போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகாரபூர்வமாக விசா வழங்கும் நிறுவனம் மூலம் 25,000 பங்களாதேஷ் டாக்கா (இலங்கை ரூபாய் 63,000) செலுத்தி இந்த விசாவைப் பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை
சந்தேக நபர் 27 வயது பங்களாதேஷ் நாட்டவர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக குறித்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |