பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் சட்டத்தரணிகள் சங்க தலைவருக்குமிடையிலான சந்திப்பு!
தற்போதைய மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாகவும் நாட்டின் சமகாலப் போக்கு தொடர்பாகவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கௌஷல்ய நவரத்ன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று முன்தினம் (23) கொழும்பிலுள்ள சட்டத்தரணிகள் சங்க கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் அண்மையகாலங்களில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலங்கள் குறித்து உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கிடம் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
அச்சட்டமூலங்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் நிலைப்பாடு
மேலும், விசேடமாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் மற்றும் இணையபாதுகாப்பு சட்டமூலம் என்பன பற்றியும், நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் தொடர்பில் தமது சங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் கௌஷல்ய நவரத்ன உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, நாட்டில் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதிலும், மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்துவதிலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கொண்டிருக்கும் மிகமுக்கிய வகிபாகம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடியதாக தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் (டுவிட்டர் பக்கத்தில்) பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் பதிவிட்டுள்ளார்.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 12 மணி நேரம் முன்