அமெரிக்கா பறந்தார் பசில்
Bandaranaike International Airport
Basil Rajapaksa
United States of America
By Sumithiran
அமெரிக்கா சென்றார் பசில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றுள்ளார்.
இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் சென்ற அவர் அங்கிருந்து வேறு விமானம் மூலம் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.
நீதிமன்றம் விதித்த தடை
முன்னதாக நீதிமன்றில் வழக்குகள் நிலுவையில் இருந்த காரணத்தால் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவிற்கு வெளிநாடு செல்வதற்கான பயணத்தடை நீடிக்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் இந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

