கோட்டா கோ கமவில் அழிக்கப்பட்ட சொத்துக்கள் : முன்னாள் எம்பிக்களுக்கு வலுக்கும் நெருக்கடி
முந்தைய அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் எரிக்கப்பட்டதால், அரசாங்கத்திடமிருந்து பெற்ற அதிகளவு இழப்பீட்டை மீட்டெடுக்க உத்தரவிடக் கோரும் அடிப்படை உரிமைகள் மனுவை, உண்மைகளை உறுதிப்படுத்த நவம்பர் 13 ஆம் திகதி அழைக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டது.
மே 9, 2022 அன்று காலி முகத்திடலில் நடைபெற்ற 'கோட்டா கோ கம' போராட்ட தளத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் வெடித்த வன்முறையால் இந்த சொத்து சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன் விசாரணை
இந்த அடிப்படை உரிமைகள் மனுவை சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான கலாநிதி ரவீந்திரநாத் தாபரே தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் மஹிந்த சமயவர்தன மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுவின் பிரதிவாதிகளாக கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு பெற்ற) இராணுவ மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, முப்படைகளின் முன்னாள் தலைமை அதிகாரி சவேந்திர சில்வா, முன்னாள் காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர்கள் டிரான் அலஸ் மற்றும் பிரசன்ன ரணதுங்க, தற்போதைய பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய, தற்போதைய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, சட்டமா அதிபர் மற்றும் 15 பேர் அடங்குவர்.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட அறிவிப்பு
மே 9, 2022 அன்று போராட்டக் களத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு வெடித்த வன்முறையின் காரணமாக வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 43 பேருக்கு முந்தைய அரசாங்கம் 1.22 பில்லியன் ரூபாயை இழப்பீடாக வழங்கியதாக பெப்ரவரி 5, 2022 அன்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் அறிவித்ததாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
பொது நிதி கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இயற்கை பேரழிவு ஏற்பட்டாலும் சொத்துக்களை அழித்ததற்காக ஒரு நபருக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச இழப்பீடு 2.5 மில்லியன் ரூபா என்றும் மனுதாரர் குற்றம் சாட்டினார்.
முறையற்ற முறையில் செலுத்தப்பட்ட இழப்பீட்டை மீட்டெடுக்க உத்தரவு
இந்த பணம் உரிய சட்ட நடைமுறைக்கு புறம்பாக செலுத்தப்பட்டுள்ளதாகவும், தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார்.
எனவே, முறையற்ற முறையில் செலுத்தப்பட்ட இழப்பீட்டை மீட்டெடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், சொத்துக்கள் அழிக்கப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்துக்களை முறையாக மதிப்பீடு செய்த பிறகு, சட்டபூர்வ முறையில் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் மேலும் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அத்தகைய உத்தரவை பிறப்பிக்க அதிகாரம் இல்லை என்றும் கூறி, சட்டமா அதிபர் இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். மனுவை ஆராய்ந்த பின்னர், உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
