சபையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டிய எம்.பி

Sri Lanka Politician Northern Province of Sri Lanka National People's Power - NPP NPP Government
By Independent Writer Feb 20, 2026 01:32 AM GMT
Report

பிரபாகரன் இருந்த காலத்தில் வடக்கில் போதைப்பொருள் பாவனை மற்றும் பாலியல் சித்திரவதைகள் இருக்கவில்லை என மலையகமக்கள் முன்னணி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நஞ்சுகள் அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த திருத்தச் சட்ட மூலங்களுக்கு நாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவோம். 

மறைக்கப்பட்ட இறுதிப்போர் ரகசியங்கள்...! ராஜபக்சக்களின் முகத்திரையைக் கிழிக்கும் பொன்சேகா

மறைக்கப்பட்ட இறுதிப்போர் ரகசியங்கள்...! ராஜபக்சக்களின் முகத்திரையைக் கிழிக்கும் பொன்சேகா

போதைப்பொருள் பாவனைக்கு அடிமை

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதால் குடும்பமே இல்லாமல் போகிறது. இவ்வாறான நிலைமையில் இதற்காக உரிய சட்டங்கள் அவசியமாகும்.

சபையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டிய எம்.பி | Control North Ltte Leader Prabhakaran Era

இதனால் இந்த சட்டமூலத்தின் நோக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது. கடந்த காலங்களில் நாட்டில் பல்வேறு கொலைகள் நடந்துள்ளன. 

இதில் அதிகமானவை போதைப் பொருளுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றது. இது தொடர்பில் அதிகபட்ச தண்டனையை வழங்கி இதனை கட்டுப் படுத்த வேண்டும் என்பதே எங்களின் கருத்தாக உள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குன்ற வைப்பது போதைப்பொருள் விநியோகமும் போதைப்பொருள் பாவனையும் பிரதான பங்கு வகிக்கிறது.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக முறைப்பாடு!

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக முறைப்பாடு!

ஜனாதிபதி நடவடிக்கை

வடக்கு மற்றும் கிழக்கை எடுத்துக்கொண்டால் பிரபாகரன் இருந்த காலத்தில் அங்கு போதைப்பொருள் பாவனையோ துஷ்பிரயோகங்களோ இருந்ததே இல்லை.

சபையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டிய எம்.பி | Control North Ltte Leader Prabhakaran Era

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக காணப்படுகிறது.சட்டம் ஒழுங்கு முறையாக செயற்படாமையால் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளது.

மலையகத்திலும் இப்போது அவ்வாறான நிலைமையே உள்ளது. எவ்வாறாயினும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார். 

இது பாராட்டத்தக்க விடயமே. ஆனால் இந்த அரசாங்கம் வந்த பின்னரே தினமும் எங்கேயாவது கொலை நடக்கும் நிலைமை காணப்படுகின்றது.

பாதாளக்குழுக்கள் 

இவ்வாறான கொலை சம்பவங்கள் நிறுத்தப்படவேண்டும். போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளே இந்த கொலைகளுக்கு காரணமாக இருக்கின்றன. 

இதனால் இதனை கட்டுப்படுத்த முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். போதைப்பொருள் பாவனை மற்றும் பாதாளக்குழுக்கள் தொடர்புப்பட்டதாக காணப்படுகிறது.

சபையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டிய எம்.பி | Control North Ltte Leader Prabhakaran Era

இதனால் முழு நாடும் இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் தான் கொலைகள் பாலியல் சித்திரவதைகள் இடம்பெறுகின்றன.

இஸ்லாமிய நாடுகளில் போதைப்பொருள், பாலியல் சித்திரவதைகள் போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. 

அந்த சட்டங்களை இங்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என்றார்.      

உச்சம் தொட்ட தங்கம் - எரிபொருள் விலை...! உலக பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடி

உச்சம் தொட்ட தங்கம் - எரிபொருள் விலை...! உலக பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    



ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015