நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக முறைப்பாடு!
Sri Lanka Police
Sri Lankan Tamils
Tamils
By Kajinthan
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராகக் காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் காவல் நிலையத்தில் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பகுதியில் தனியார் ஒருவரால் மேற்கொள்ளப்படும் விளம்பர சேவையினை முன்னறிவித்தல் இன்றி நிறுத்தியமை தொடர்பில் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒலிபரப்பு சேவை
மேலும் தெரியவருகையில், தனியார் ஒருவரால் பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்ற விளம்பர ஒலிபரப்பு சேவையினை, அரசியல் பழிவாங்கல் காரணமாக முன்னறிவித்தல் இன்றி உடனடியாக மூடும்படி சபைத் தீர்மானம் எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், இதை அறிந்த நிறுவன உரிமையாளர் கோப்பாய் காவல் நிலையத்தில் இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி