அம்பலத்துக்கு வந்த பசிலின் சதித்திட்டம்!

Basil Rajapaksa Sri Lankan Peoples 21st Amendment Sri Lankan political crisis
By Kiruththikan May 23, 2022 09:31 AM GMT
Kiruththikan

Kiruththikan

in அரசியல்
Report

21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை சீர்குலைக்கும் சதித்திட்டத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஈடுபட்டுள்ளதாக அனைத்து கட்சி போராளிகள் என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இந்த அமைப்பு காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட அமைப்பா என்பது பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.

மக்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்கி, அராஜக தேசம் உருவாக காரணமாகவும் தன்னிச்சையான அநீதியான ஆட்சிக்கு வழிவகுத்த 20வது திருத்தச் சட்டம் தொடர்பில் நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு மற்றும் அதிருப்தி காரணமாக 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

அம்பலத்துக்கு வந்த பசிலின் சதித்திட்டம்! | Basil In Conspiracy To Sabotage The 21St Amendment

அந்த திருத்தச் சட்டம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுகிறது. எனினும் தோல்வியான ஆட்சி, ஊழல் காரணமாக மக்களால் ஆட்சி அதிகாரத்தில் இருந்து துரத்தப்பட்ட ராஜபக்சவினரின் ஆவிகள், இந்த ஜனநாயக, மக்களுக்கு சார்பான அமைச்சரவை பத்திரம் நிறைவேற்றப்படுவதை தடுக்கவும் காலம் தாழ்த்தவும் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கவும் சதித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இரட்டை குடியுரிமையாளரான பசில் ராஜபக்ச இந்த சதித்திட்டத்தை அரங்கேற்றி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மக்களின் உணர்வுகளை மதிக்காது நாட்டை அதளபாதாளத்திற்குள் தள்ளி, மக்களை நடுத்தெருவில் நிறுத்தி ராஜபக்ச குடும்ப ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் குறுகிய நோக்கில் மேற்கொள்ளும் இந்த முயற்சியை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அரச தலைவர் மாத்திரமல்லாது பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் பசில் ராஜபக்ச என்ற அமெரிக்க பிரஜை முன்னெடுத்துள்ள இந்த அநாகரீகமான மற்றும் மோசமான திட்டத்தை தோற்கடித்து, 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைவரும் பேதங்களை மறந்து இணைந்து செயற்படுவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

அம்பலத்துக்கு வந்த பசிலின் சதித்திட்டம்! | Basil In Conspiracy To Sabotage The 21St Amendment

மேலும் நாட்டுக்காக எனக் கூறி, புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்ட மக்கள் பிரதிநிதிகள், இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் மேற்கொள்ளும் சாதகமான மற்றும் செயற்பாட்டு ரீதியான தலையீடுகளை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் எனவும் அந்த அனைத்து கட்சி பேராளிகள் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017