அமெரிக்க குடியுரிமையை கைவிட ஒப்புக்கொண்ட பசில் - அதிபர் ரணிலுக்கு புகழாரம்
தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடத் தயார் என சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு இரட்டைக் குடியுரிமை தடையாக இருந்தால் அதனை கைவிடத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
''நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தடையாக காணப்படும் அனைத்து விடயங்களையும் விட்டுக் கொடுக்கத் தயார்.
தாம் வெற்றியடைவதா இல்லையா என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும்.
நாட்டில் கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அதிபர் ரணில் பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியுள்ளார்.
எரிவாயு பிரச்சினை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசை, பத்து மணித்தியால மின்வெட்டு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியுள்ளார்.'' என தெரிவித்துள்ளார்.
