ராஜபக்சர்களுக்காக கிழக்கில் முகாமமைத்த பிள்ளையான்! ஆயுதங்களுடன் சிக்கிய 70 பேர்
பல சீறுடைகளை அணிந்து கொண்டு கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு தேவையான செயற்பாடுகளை பிள்ளையான் செய்ததாக முன்னாள் அமைச்சர் பீல்ட்மார்சல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சரத் பொன்சேக்கா,
காட்டில் ஒரு முகாம்
''தமிழீழ விடுதலை புலிகளில் இருந்து பிரிந்து வந்த பிள்ளையான் சுங்காவில் பகுதிக்கு வடக்கு பக்கம் இருந்த சிங்கள கிராமத்திற்கு அருகில் காட்டில் ஒரு முகாமை அமைத்து கொண்டிருந்தார்.
அங்கு 150 பேர் இருந்தனர். அதில் 80 பேர் 13 வயதுக்கும் குறைந்தவர்கள். அவர்களை நாம் ICRC யிடம் பாரப்படுத்தினோம்.
மிகுதி 70 பேரும் ஆயுதங்களுடன் இருந்தனர். நாங்கள் அவர்களுக்கு பாதுகாப்பும் வழங்கினோம்.
பிள்ளையான் ராஜபக்சர்களுடன்
பின்னர் பிள்ளையான் ராஜபக்சர்களுடன் தான் இருந்தார். அவர்கள் தான் பிள்ளையானை அரசியலுக்கு கொண்டு வந்தனர்.
ராஜபக்சர்களு் தான் அவரை கிழக்கு மாகாண முதலமைச்சராக்கினர். மேலும் பிள்ளையான் ராஜபக்சர்களுக்க்கு தேவையானவற்றை கிழக்கில் செய்து கொண்டிருந்தார். அந்த காலத்தில் பிள்ளையான் பல சம்பங்களுடன் தொடர்பு பட்டிருக்கிறார் என தெரிவிக்கப்படுகிறர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
