பசிலுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
Basil Rajapaksa
Sri Lankan Peoples
Law and Order
By Dilakshan
மாத்தறை பிரவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் நிலத்தை ரூ.50 மில்லியனுக்கு வாங்கியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு (Basil Rajapaksa) எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கானது, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (23) விசாரணைக்கு வந்துள்ளது.
அதன்போது, பசில் ராஜபக்ச உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
வழக்கு ஒத்திவைப்பு
அதன்படி, மாத்தறை தலைமை நீதவான் அருண புத்ததாச, சம்பந்தப்பட்ட வழக்கை நவம்பர் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கு, மாத்தறை பிரவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் நிலத்தை ரூ.50 மில்லியனுக்கு வாங்கியது தொடர்பாக 2017 ஆம் ஆண்டு FCID அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்