கிழக்கில் மீண்டும் தமிழர் பகுதியை ஆக்கிரமிக்கும் முயற்சி - முறியடித்த மக்கள்!

Batticaloa Shanakiyan Rasamanickam Sri Lanka Tamil National Alliance
By Kalaimathy Dec 12, 2022 10:36 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பிற்குட்பட்ட போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் எல்லைக் கற்கள் இடுவதற்காக தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முயற்சி செய்துள்ளனர்.

இந்த எல்லையிடும் முயற்சி இன்ற திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அந்த அந்த இடங்களில் ஒன்று கூடிநின்றுள்ளனர். அத்தோடு மிகப்பிரதான இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள வெல்லாவெளி கல்லடிப் பிள்ளையார் ஆலயத்தில் மக்கள் இன்றய தினம் மாபெரும் சிரமதானப் பணியையும், அன்னதான நிகழ்வையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

மக்கள் எதிர்ப்பு

கிழக்கில் மீண்டும் தமிழர் பகுதியை ஆக்கிரமிக்கும் முயற்சி - முறியடித்த மக்கள்! | Batticalo Archaeology Tna Mp Shanakiyan Tamil

தமது நடவடிக்கைகளுக்கு மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் எதிர்ப்புத் தெரிவிப்பதாக அறிந்த தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் ஆரம்பத்தில் வெல்லாவெளியில் அமைந்துள்ள பிரதேச செயலகத்தினுள் சென்று பிரதேச செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையறிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,  நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மா.நடராசா, போரதீவுப் பற்றுப்பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி, மற்றும் பிரதேச சபை உறுப்பினர் தியாகராஜா உள்ளிட்ட பலர் பிரதேச செயலகத்திற்குச் சென்று பிரதேச செயலாளருடனும், தொல்லியல் திணைக்களத்திலிருந்து எல்லைக் கற்கள் இடுவதற்குசென்ற அதிகாரிகளிடமும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

கைவிடப்பட்ட நடவடிக்கை

கிழக்கில் மீண்டும் தமிழர் பகுதியை ஆக்கிரமிக்கும் முயற்சி - முறியடித்த மக்கள்! | Batticalo Archaeology Tna Mp Shanakiyan Tamil

பின்னர் தமிழ் மக்களின் பூர்வீக இடங்களை தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தி எல்லைக்கற்கள் இடுவதற்கு மக்களும், மக்கள் பிரதிநிதிகளும், எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதன் போது அதிகாரிகளின் நடவடிக்கைகளை கைவிடுமாறும், இவ்விடயம் தொடர்பில் கிராமமட்ட அமைப்புக்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும், எதிர்வரும் தைப் பொங்கல் தினத்திற்குப் பின்னர் ஒரு நாளில் கலந்துரையாடுவது என எடுத்துரைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், அங்கிருந்து தலைமைக் காரியாலயத்திலுள்ள தொல்லியல் திணைக்கள அதிகாரி ஒருவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தொலைபேசியில் உரையாடி இவ்விடையத்தை தெரியப்படுத்தியதற்கு இணங்கவும், அவர்களது இன்றய நடவடிக்கை கைவிடப்பட்டது.

மக்களுடன் கலந்துரையாடல்

கிழக்கில் மீண்டும் தமிழர் பகுதியை ஆக்கிரமிக்கும் முயற்சி - முறியடித்த மக்கள்! | Batticalo Archaeology Tna Mp Shanakiyan Tamil

தமிழர்களின் பூர்வீக இடங்களாகவுள்ள தொல்லியல் பகுதி என அடையாளப்படுத்தப்பட்ட வேத்துச்சேனை, வெல்லாவெளி கல்லடிப்பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றிற்கு மக்கள் பிரதிநிதிகள் நேரில் சென்று நிலமையை அங்கு கூடிநின்ற மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசி அமைப்பாளர் த.சுரேஸ், அப்பகுதிக்குச் சென்று இந்நிலமை தொடர்பில் அங்கிருந்த மக்களுடன் கலந்துரையாடினார்.


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015