யாழில் கோர விபத்தில் சிக்கி தந்தை - மகன் பலி...!
யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (14-11-2026) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையையும் மகனுமே உயிரிழந்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சாவகச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையையும் மகனையும் அவர்களுக்கு பின்னால் வந்த கே.டி.எச் வாகனம் மோதியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்து சம்பவத்தினை அடுத்து கே.டி.எச் வாகனத்தில் இருந்தவர்கள் வாகனத்தை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

அத்தோடு குறித்த வாகன சாரதி உட்பட வாகனத்தில் இருந்த அனைவரும் போதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் தப்பி சென்ற வாகன சாரதி உள்ளிட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரி சாவகச்சேரி காவல் நிலையம் முன்பாக ஊரவர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

