முல்லைத்தீவில் வயல் காணிக்குச் சென்ற 71 வயது முதியவர் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு - மல்லாவி, பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவர் வயல் காணியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மல்லாவி, யோகபுரம் பகுதியைச் சேர்ந்த 260ஆம் இலக்க முகவரியில் வசிக்கும் சின்னையா திருச்செந்தூர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (12.11.2026) மாலை மல்லாவி 3ஆம் யூனிட் பகுதியில் அமைந்துள்ள வயல் காணியை உழுவதற்காகச் சென்ற அவர், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் அவரைத் தேடிச் சென்றுள்ளனர்.
முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை
இதன்போது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், ஊரவர்களின் உதவியுடன் சடலம் மல்லாவி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், இன்று (13) பிரேதப் பரிசோதனைக்காக சடலம் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மரணம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |