ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துத் தீப்பிடித்த எண்ணெய் கப்பல்கள்!
உலகின் மிக முக்கியமான கடல்சார் எரிசக்திப் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz), அனுமதிக்கப்படாத பாதை வழியாகச் செல்ல முயன்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் கடற்கண்ணியில் (Naval mine) மோதி வெடித்துத் தீப்பிடித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (IRGC) கடற்படை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் தங்களது ரேடார் மற்றும் வழிசெலுத்தல் கருவிகளை அணைத்துவிட்டு ரகசியமாகப் பயணிக்க முயன்றபோதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இரண்டு கப்பல்கள்
வெடித்துத் தீப்பிடித்த இரண்டு கப்பல்களில் ஒன்று மிகப்பெரிய எண்ணெய் தாங்கிக் கப்பலான சூப்பர் டேங்கர் (Supertanker) என ஈரான் கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
#فوری: سپاه پاسداران انقلاب اسلامی ایران تصاویری از انفجار دو فروند نفتکش متخلف در جنوب تنگه هرمز را منتشر کرد. https://t.co/8uL2s51kyu
— ژئوپلیتیک (IRGC )🌐 (@Geopolitics_IRG) November 13, 2026
இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்தப் பயங்கர வெடிப்பு மற்றும் தீப்பிழம்புகளால் ஹோர்முஸ் நீரிணையின் தெற்குக் கரையோரப் பகுதியே ஒளிர்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இரண்டு கப்பல்களும் ஈரான் கடற்படையின் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தின் எச்சரிக்கைகளையும் விதிமுறைகளையும் மீறி தங்களது ரேடார் மற்றும் இருப்பிடத்தைக் காட்டும் கருவிகளை அணைத்துவிட்டுத் தடைசெய்யப்பட்ட தெற்குப் பாதை வழியாகக் கடக்க முயன்றபோதே கடற்கண்ணியில் சிக்கியுள்ளன.
கப்பல் உரிமையாளர்கள்
இவ்விபத்தில் சிக்கிய கப்பல்களின் பெயர்கள், அவை எந்த நாட்டுக் கொடியுடன் பயணித்தன என்ற விவரங்கள் அல்லது கப்பல் ஊழியர்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்கள் ஈரானின் கடல்சார் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் எச்சரிக்கைகளைப் புறக்கணித்துத் தடைசெய்யப்பட்ட பாதைகளில் செல்லும் கப்பல்கள் இதே போன்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் IRGC கடற்படை கப்பல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த பெப்ரவரி இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய தாக்குதல்களைத் தொடர்ந்து உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையில் கடற்கண்ணி வெடிப்புகள் மற்றும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.
சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) தரவுகளின்படி, இப்பிராந்தியத்தில் மோதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 130 இற்கும் மேற்பட்ட கடல்சார் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |