கொட்டி தீர்க்கும் கனமழை: ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை
நாட்டில் நிலவி வரும் தொடர்ச்சியான மழையுடனான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது நாளை (14-11-2026) பிற்பகல் 4.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அபாய எச்சரிக்கை
இதனிப்படையில்,
இரண்டாம் நிலை எச்சரிக்கை – விழிப்புடன் இருங்கள் (Amber - ஆரஞ்சு நிற எச்சரிக்கை):
- பதுளை மாவட்டம்: எல்ல (Ella), பசறை (Passara), பண்டாரவளை (Bandarawela), பதுளை (Badulla), சொரணாதோட்டை (Soranathota) மற்றும் ஹாலி-எல (Hali-Ela) ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள்.

முதலாம் நிலை எச்சரிக்கை – அவதானத்துடன் இருங்கள் (Yellow - மஞ்சள் நிற எச்சரிக்கை):
- கண்டி மாவட்டம்: உடுநுவர (Udunuwara), யட்டிநுவர (Yatinuwara), தொழுவ (Doluwa), பஸ்பாகே கோரளை (Pasbage Korale), உடபளாத (Udapalatha), கங்க இஹல கோரளை (Ganga Ihala Korale), உடதும்பர (Udadumbara), ஹாரிஸ்பத்துவ (Harispattuwa) மற்றும் தெல்தோட்டை (Deltota) ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள்.
- கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை (Yatiyantota), புலத்கொஹுபிட்டிய (Bulathkohupitiya), ருவன்வெல்ல (Ruwanwella), கேகாலை (Kegalle), வரக்காப்பொல (Warakapola), தெரணியகல (Deraniyagala), தெஹியோவிட்ட (Dehiowita), அரநாயக்க (Aranayake) மற்றும் மாவனல்லை (Mawanella) ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள்.
- நுவரெலியா மாவட்டம்: மதுரட்ட (Mathurata), மேற்கு கொத்மலை (Kotmale West), கிழக்கு கொத்மலை (Kotmale East), ஹங்குரன்கெத்த (Hanguranketha), நுவரெலியா (Nuwara Eliya), தலவாக்கலை (Thalawakele), நில்தண்டாஹின்ன (Nildandahinna), வலப்பனை (Walapane), அம்பகமுவ கோரளை (Ambagamuwa Korale) மற்றும் நோர்வூட் (Norwood) ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள்.
- இரத்தினபுரி மாவட்டம்: எஹெலியகொட (Eheliyagoda), எலபாத்த (Elapatha), அயகம (Ayagama) மற்றும் வெலிகெபொல (Weligepola) ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள்.
இந்தநிலையில் மலையகப் பகுதிகள் மற்றும் மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களில் பெய்து வரும் பலத்த மழையால் மண் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் மலைப்பாங்கான பகுதிகள், மண் மேடுகள் மற்றும் ஆபத்தான சரிவுகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மண்சரிவு, கற்பாறைகள் உருண்டு விழுதல் மற்றும் மண் மேடுகள் சரிதல் போன்ற அபாயங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |