யாழ்ப்பாணம் பேருந்து நிலைய நில உரிமைச் சர்ச்சை: பெரும் கவலையில் வீதியோரக் கடை உரிமையாளர்கள்
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் நில உரிமை குறித்த சர்ச்சை தொடர்பில் பொதுமக்கள் தமது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள தற்காலிக வீதியோர வர்த்தக நிலையங்களை அகற்றுவது குறித்து வெளியாகி வரும் கருத்துக்களுக்கு மத்தியில் மக்கள் தமது கருத்துக்களை கவலையுடன் வெளிப்படுத்தியுள்ளனர்.
பேருந்து நிலையம் அமைந்துள்ள காணி தமக்குச் சொந்தமானது என இலங்கைப் போக்குவரத்து சபை உரிமை கோரி வரும் நிலையில் அது அரச காணி எனக் கூறி அதனை மீளப்பெற யாழ்ப்பாணப் பிரதேச செயலகம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
15 முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தினசரி வாடகை செலுத்தி இங்கு வியாபாரம் செய்யும் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கு முறையான மாற்று இடம் வழங்காமல் கடைகளை அகற்றினால் தமது வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்படும் எனத் தமது ஆதங்கத்தை பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளனர்....