அமெரிக்கா - இஸ்ரேலுக்கு ஈரான் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் போர் சர்வதேசச் சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல் என்றும் இதனால் ஒட்டுமொத்த சர்வதேச சட்ட ஒழுங்கின் நம்பகத்தன்மையே ஆபத்தில் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
இப்போரின் விளைவுகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் தாண்டி உலகளாவிய தாக்கங்களை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் பாதுகாப்பு
இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் ஈரானின் பாதுகாப்பு அல்லது மத்திய கிழக்கில் உள்ள அதிகார சமநிலையை விட மிக அதிகமானது என அராக்சி குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு சர்வதேசச் சட்டங்களின் கீழ் இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கான தடை என்பது வலிமையான நாடுகள் பலவீனமான நாடுகளுக்கு வழங்கும் சலுகை அல்ல எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், பொதுமக்களுக்கான அடிப்படை உட்கட்டமைப்புகள் மற்றும் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்ட ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், சர்வதேசச் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான கேள்விகளை எழுப்புவதாக அவர் சாடியுள்ளார்.
சர்வதேச விதிமுறைகளைப் புறக்கணித்து மேற்கொள்ளப்படும் இத்தகைய இராணுவ ஆக்கிரமிப்புகள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டால் அது எதிர்காலத்தில் உலக நாடுகளிடையேயான சட்ட பாதுகாப்பைச் சிதைத்துவிடும் என அவர் எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) நிலவும் போர் பதற்றம் மற்றும் ஈரானின் தெற்கு துறைமுக நகரங்கள் மீது நடத்தப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில், சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்டும் வகையிலும் அமெரிக்க-இஸ்ரேலிய நடவடிக்கைகளைச் சட்டரீதியாக அம்பலப்படுத்தும் வகையிலும் ஈரான் தனது இராஜதந்திரப் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |