ஊடகவியலாளர் கோகுலதாசன் பிணையில் விடுதலை!
batticaloa
release
journalist
kogulathasan
By Thavathevan
மட்டக்களப்பு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் முருகுப்பிள்ளை கோகுலதாசன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் வழக்குத் தவணை இடம்பெற்ற போது இவருக்கு நீதிபதி இரண்டு இலட்சம் சரீரப் பிணை வழங்கியதோடு, ஒவ்வொரு மாதமும் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை காவல் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்த தவணை எதிர்வரும் 13.06.2022 அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் கடந்த 2020.11.28 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி