வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்!
மட்டக்களப்பில்(Batticaloa) சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டமானது, காந்திபூங்காவில் இன்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தந்தை செல்வா பூங்கா வீதி சுற்றுவட்டத்தில் இன்று காலை 9.00 மணிக்கு நா.உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத். ஞா.சிறிநேசன், முன்னாள் நா. உறுப்பினர் பா.அரியேந்திரன் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் நடராசா உட்பட ஆயிரக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகள் ஒன்று கூடியுள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டம்
பின்னர் ஒன்று கூடியவர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்வர்களின் புகைகப்படங்கள் மற்றும் கொலைகாரர்களால் நீதி வழங்க முடியுமா? நாங்கள் கேட்பது இழைப்பீடையே மரண சான்றிதழையே அல்ல முறையான நீதி விசாரணையை, எமது உரிமை எமது எதிர்காலம் எப்போது, எமது உறவுகள் எங்கே, என பல வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றுள்ளனர்.
இதையடுத்து, குறித்த ஊர்வலமானது தந்தை செல்வா பூங்கா வீதி சுற்றுவட்டத்திலிருந்து நகர் மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்தையடைந்து காந்திபூங்காவை சென்றடைந்துள்ளது.
அதனை தொடர்ந்து காந்திபூங்காவில் 11.00 மணிவரை போராட்டத்தை முன்னெடுத்த போராட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
you may like this,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |