மட்டக்களப்பில் வாள்வெட்டு தாக்குதல்: தாயும் ஒரு வயது குழந்தையும் படுகாயம்
மட்டக்களப்பில் (Batticaloa) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒரு வயது குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (27) ஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காத்தான்குடி காவல் பிரிவிலுள்ள ஆரையம்பதி தீர்த்தகரை வீதியிலுள்ள வீடு ஒன்றில் வாழந்துவரும் பெண் ஒருவருக்கும் அவரது உறவினருக்கும் இடையே பண கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது.
வாள்வெட்டு
இந்தநிலையில், சம்பவதினமான நேற்று முன் தினம் (27) இரவு 9.00 மணியளவில் பெண்ணின் வீட்டுக்கு சென்ற உறவினர் பணத்தை கேட்டு ஏற்பட்ட வாய்தரக்கத்தையடுத்து பெண்ணின் உறவினரான ஆண், பெண்மீது வாளால் வெட்டீ தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதில், பெண்ணும் அவரது ஒரு வயது குழந்தையும் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
இதனையடுத்து படுகாயமடைந்த குழந்தையும் அவரது தாயாரும் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை குறித்த பெண்மீதும் அவரது குழந்தை மீதும் தாக்குதலை நடாத்தியவர் காயமடைந்து நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        