முற்றாக தீக்கிரையான மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் ஆலயம்!
Batticaloa
Sri Lanka
Fire
By Shadhu Shanker
மட்டக்களப்பு (Batticaloa) கல்லடி பேச்சி அம்மன் ஆலயமானது முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
குறித்த தீவிபத்தானது இன்று வெள்ளிக்கிழமை ( 20 ) இரவு இடம்பெற்றுள்ளது.
கல்லடி உப்போடையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க பேச்சியம்மன் ஆலையத்தில் இன்றைய தினம் (20 வெள்ளிக்கிழமை பூஜை இடம்பெற்றுள்ளது.
பேச்சி அம்மன் ஆலயம்
இந்நிலையில், பூஜைக்காக ஏற்றப்பட்டிருந்த விளக்கு பேச்சி அம்மனின் ஓலை குடிலில் பட்டு தீ பிடித்து எரிந்துள்ளது.
தற்போது தீ அணைக்கப்பட்ட நிலையில் எவருக்கும் காயங்களோ உயிர்ச் சேதங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேச்சி அம்மன் மிகவும் சிறப்பு வாய்ந்த தெய்வமாக குறித்த பிரதேச மக்களால் போற்றப்படும் நிலையில் அம்பாளின் சிலை ஆரம்ப காலந்தொட்டு ஓலைக்குடிலில் வைக்கப்பட்டுள்ளமையே குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி