பிபிஎல் தொடரில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஸ்மித்!
அவுஸ்திரேலியாவில் நடைபெரும் BBL தொடரின் இன்றைய போட்டியில் சிட்னி சிக்ஸர் அணி வீரர் ஸ்டீவன் ஸ்மித் 33 பந்துகளில் 66 ஓட்டங்கள் பெற்றார்.
பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர் அணிக்காக விளையாடி வரும் ஸ்டீவன் ஸ்மித் தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
கடந்த இரண்டு போட்டிகளில் சதம் கடந்த அவர், இன்று நடந்து வரும் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் ருத்ர தாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
வாணவேடிக்கை
ONTO THE ROOF. STEVE SMITH YOU ARE A FREAK#BBL12 @BKTtires #GoldenMoment pic.twitter.com/W73ebCf0m6
— cricket.com.au (@cricketcomau) January 23, 2023
ஆறு ஓட்டங்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டிய அவர் 22 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
இன்றைய போட்டியில் ஹாட்ரிக் சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் நாதன் எல்லிஸ் பந்துவீச்சில் ஸ்மித் ஆட்டமிழந்தார்.
அவர் 33 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் பெற்றார்.