யாசகரின் கத்தி குத்தில் ஒருவர் பலி
பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள சிறப்பு அங்காடி ஒன்றுக்கு எதிரில் இருந்த யாசகர் ஒருவர் கத்தியால் குத்தியதில் வாடிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நபர் நேற்றிரவு (26) சிறப்பு அங்காடியில் பொருட்களை கொள்வனவு செய்து விட்டு, வெளியில் வரும் போது அவருக்கும் வெளியில் இருந்த யாசகருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அந்த வாக்குவாதம் முற்றியதில், யாசகர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, வாடிக்கையாளரை குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
கத்தி குத்துக்கு இலக்காகி, சிறப்பு அங்காடிக்கு எதிரில் விழுந்து கிடந்த நபர், கொஸ்வத்தை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மாலபே பொத்துஹராவா பிரதேசத்தை சேர்ந்த 57 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபரான யாசகர் சம்பவத்தை அடுத்து பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
