அழகான சருமத்திற்கு மாதுளை பழத்தோல்! இப்படி பயன்படுத்தினால் போதும்
பெண்கள் எப்போதும் முகத்தை பொலிவுடனும், அழகாகவும் வைத்திருக்க விரும்புவார்கள்.
எனினும் சமூக வலைத்தளங்களில் பார்த்து சில இரசாயன கலவை போன்றவைகளை பயன்படுத்துவதனூடாக தற்காலிக தீர்வுகளையே பெற முடியும்.
எனவே நிரந்தரமான தீர்வை பெற இயற்கையான முறைகளை பின்பற்றலாம். அந்தவகையில் மாதுளப்பழமானது சருமத்திற்கு எவ்வாறு உதவுகின்றது என பார்க்கலாம்.
மாதுளை பழத்தோள்
அந்தவகையில் மாதுளை பழத்தோளில் அதிக ஆன்டி ஆக்ஸிடண்டும் ஊட்டச்சத்துகளும் இருக்கிறது எனவே சருமத்தை பொலிவாக பராமரிக்க மாதுளம்பழத் தோல் உதவும்.
மாதுளம்பழ தோலை நன்றாக கழுவி, வெயிலில் காய வைத்து, பொடி செய்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கரண்டி மாதுளம் பொடியோடு தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்களின் பிறகு கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.
இந்த மாதுளத் தோல் பொடியைச் சேர்த்து தேநீர் போட்டுக் குடிக்கலாம். இதனால் சருமத்தில் இருக்கும் பிரச்சினைகள் பல தீர்க்கப்படுகின்றது. இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வர சிறந்த பலனை பெறலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |