கொரோனாவால் கடும் நெருக்கடி -அமெரிக்க அரச தலைவர் விடுத்துள்ள உத்தரவு
அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அவசரகால நிலை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 8 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதே போல் அங்கு 9½ இலட்சத்துக்கும் அதிகமான உயிர்களை கொரோனா பறித்துள்ளது.
இந்த கொடிய வைரசை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த அவசர நிலை அடுத்த மாதம் (மார்ச்) 1-ம் திகதியுடன் முடிவுக்கு வர இருந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அவசர நிலையை மேலும் நீடித்து அரச தலைவர் ஜோ பைடன் நேற்று உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா தொற்று நோய் அமெரிக்காவின் பொதுசுகாதாரம் மற்றும் தேசத்தின் பாதுகாப்புக்கு தொடர்ந்து ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே மார்ச் 1, 2022-க்கு பின்னரும் அவசர நிலை தொடர வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
