1000 நாட்களை கடந்த உக்ரைன் - ரஷ்ய போர் பதற்றம்: பைடன் வழங்கிய அதிரடி ஒப்புதல்!
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் பதற்றம் 1000 நாட்களை கடந்து செல்கின்ற நிலையில், யுக்ரைனுக்கு கண்ணிவெடிகளை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) ஒப்புக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, விரைவில் உக்ரைனுக்கு கண்ணிவெடிகளை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜோ பைடனின் மேற்படி, கண்ணிவெடி ஒப்புதல் யுக்ரைனின் கிழக்குப் பகுதியில் முன்னேறி வரும் ரஷ்யப் படையினரைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
அமெரிக்காவின் ஒப்புதல்
அத்துடன், கண்ணிவெடிகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கி இருந்தாலும் அதிக மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகளில் குறித்த கண்ணிவெடிகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் யுக்ரைன் உறுதியாகயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இது போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவது பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதைக் கடந்த காலங்களில் தடுத்திருந்தது.
இருப்பினும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி வெள்ளை மாளிகைக்குச் செல்வதற்கு முன்னர் யுக்ரைனின் போர் முயற்சியை வலுப்படுத்துவதற்கு தற்போதைய அமெரிக்க அரசாங்கம் முயல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அமெரிக்கா வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை முதன் முறையாக பயன்படுத்தி ரஷ்யாவின் இராணுவ கிடங்கை உக்ரைன் நேற்று(19) தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |