நாடாளுமன்ற தேர்தலில் பெருவெற்றி : நாமல் வெளியிட்ட அறிவிப்பு
Namal Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Election
By Sumithiran
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை பொதுஜன பெரமுன மிகுந்த பலத்துடன் எதிர்கொள்ளுமெனவும், தேர்தலில் கட்சி பெரு வெற்றிபெறும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் வெற்றியை நோக்கி கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ள நிலையில்
பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ள நிலையில், கட்சியின் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலை பொதுஜன பெரமுன
எவ்வாறெனினும் எதிர்வரும் பொதுத் தேர்தலை பொதுஜன பெரமுன மிகுந்த பலத்துடன் எதிர்கொள்ளும். சந்தர்ப்பவாதத்துடன் செயற்பட்டு கட்சியின் கொள்கையை மாற்றப்போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி