கூகுளிடம் இருந்து தற்செயலாக வந்த 9 கோடி ரூபாய் பணம்! பொறியாளருக்கு அடித்த அதிர்ஷ்டம்

Sri Lanka United States of America India
By Kiruththikan Sep 18, 2022 01:31 AM GMT
Report

கூகுள்

அமெரிக்காவில் ஒரு பொறியாளரின் வங்கி கணக்கில் எதிர்பாராத விதமாக 9 கோடி ருபாய் பணத்தை கூகுள் நிறுவனம் செலுத்தியுள்ளது.

அதிலிருந்து ஒரு ரூபா கூட எடுக்காமல் எப்படி கூகுள் நிறுவனத்தை தொடர்பு கொள்வது என இணையத்தில் தேடிய ஆச்சரியமான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஒமாஹாவின் மெட்ரோ பகுதியில் உள்ள யுகா லேப்ஸ் நிறுவனத்தில் பொறியாளராக வேலைபார்க்கும் சாம் கரி (Sam Curry), கூகுளில் இருந்து எதிர்பாராத தொகையாக 250,000 அமெரிக்க டொலர் பணம் (இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 9 கோடி) தனது கணக்கில் வந்தது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்தை அடைந்த டுவிட்டர் பதிவு

சாம் புதன்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில், "கூகுள் எனக்கு $249,999 ஐ தோராயமாக அனுப்பி 3 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் எதுவும் கேட்கவில்லை.

நான் கூகுளைத் தொடர்புகொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா? ( நீங்கள் அதைத் திரும்பப் பெற விரும்பவில்லை என்றால் சொல்லிவிடுங்கள் பரவாயில்லை...)" என்று வேடிக்கையாக ஒரு பதிவை செய்தார்.

இந்த விடயம் ஒருவழியாக கூகுள் நிறுவனத்தை அடைய, இது குறித்து கூகுள் செய்தித் தொடர்பாளர் பதிலளித்தார்.

மனிதப் பிழையின் விளைவாக எங்கள் குழு சமீபத்தில் தவறான நபருக்கு பணம் செலுத்தியது.

பணத்தை பெற்றவர் விரைவாக எங்களுக்கு தகவல் தெரிவித்ததை நாங்கள் பாராட்டுகிறோம், அதைச் சரிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று அவர் கூறினார்.

3 வாரங்களுக்கு மேலாக சாம் வங்கிக் கணக்கில் பணம் இருந்தது, ஆனால் அவர் எந்தத் தொகையையும் செலவழிக்காமல் கூகுள் நிறுவனம் பணத்தைத் திரும்பப் பெறுவதற்காகக் காத்திருந்தார்.

அதேபோல், கூகுள் தற்செயலாக பணத்தை செலுத்தியது என்ற அவரது யூகம் சரியாக இருந்தது.

பதில் அளித்த கூகுள் நிறுவனம் 

கூகுளிடம் இருந்து தற்செயலாக வந்த 9 கோடி ரூபாய் பணம்! பொறியாளருக்கு அடித்த அதிர்ஷ்டம் | Biggest Lottery Prize Engineer Won By Google

கூகுள் நிறுவனம் பணத்தை திரும்பப் பெற விரும்புவதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

சாம் சில சமயங்களில் கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு தங்கள் மென்பொருளில் பிழைகளைக் (bugs) கண்டறிய உதவுவதாகவும் கூறினார்.

அவர் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "கூகுள் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளவே பணத்தை அப்படியே வைத்திருந்தேன்.

நான் அதை எளிமையாக பயன்படுத்த எனக்கு எல்லா சுதந்திரமும் இருந்தது. கூகுள் எனக்கு சரியாக பதிலளிக்கவில்லை என்றால், வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக அந்த பணத்தை வேறொரு கணக்கில் மாற்ற வேண்டியிருக்கும்" என்று அவர் கூறினார்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026