கங்கை ஆற்றில் கணப்பொழுதில் இடிந்து வீழ்ந்தது பாலம்(காணொளி)
பீகாரில் கங்கை ஆற்றின் மீது கட்டுவேலை நடந்து கொண்டிருந்த பாலம் கணப்பொழுதில் இடிந்து வீழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலமே இவ்வாறு திடீரென இடிந்து விழுந்தது.
பாலம் இடிந்து விழும் காட்சியை அங்கிருந்தவர்கள் காணொளியாக பதிவு செய்தனர்.
பாலம் இடிந்து விழுவது இரண்டாவது முறை
#WATCH | Under construction Aguwani-Sultanganj bridge in Bihar’s Bhagalpur collapses. The moment when bridge collapsed was caught on video by locals. This is the second time the bridge has collapsed. Further details awaited.
— ANI (@ANI) June 4, 2023
(Source: Video shot by locals) pic.twitter.com/a44D2RVQQO
இந்த பாலம் இடிந்து விழுவது இது இரண்டாவது முறையாகும் பாலம் கட்டுவதற்கான செலவு சுமார் ரூ.1,750 கோடி என தகவல் வெளியாகி உள்ளது.
பாலம் இடிந்து விழுந்த சம்பவம் காலை 6 மணியளவில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
