இலங்கை மின்சார சபை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
CEB
Sri Lankan Peoples
By Vanan
பாதுகாப்பு காரணங்களால் தற்காலிகமாக மூடப்பட்ட இணையவழி கட்டண முறைமை மீண்டும் இயங்குவதாக இலங்கை மின்சார சபை(CEB) அறிவித்துள்ளது.
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் (SLCERT) உதவியுடன் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டதாக அறிக்கையொன்றின் மூலம் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இணையவழி கட்டண முறைமை
பங்குதார வங்கிகளுடன் ஏற்கனவே உள்ளக நல்லிணக்க பொறிமுறை தக்கவைக்கப்பட்டுள்ளதுடன், மின்சார சபைக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு நிதி இழப்பும் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இணையவழி கட்டண முறைமை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
ஆகவே, இணையவழி கட்டண முறைமையில் மீண்டும் இணையுமாறு இலங்கை மின்சார சபை நுகர்வோரை கேட்டுக்கொண்டுள்ளது.


2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி