டிட்வா புயலினால் பிறப்பு சான்றிதழை இழந்த ஓரு மில்லியனுக்கு அதிகமானோர்

Sri Lankan Peoples Landslide In Sri Lanka Floods In Sri Lanka Cyclone Ditwah
By Sathangani Dec 16, 2025 06:01 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

பேரனர்த்தத்தின் போது ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களை வழங்குவதற்காக நடமாடும் சேவைத் திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் சசிதேவி ஜல்தீபன் தெரிவித்துள்ளார்.

அண்மைய பேரிடரால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 2.2 மில்லியன் மக்களில், பாதிக்கும் மேற்பட்டோர் இந்த முக்கியமான ஆவணங்களை இழந்துள்ளதாக அத்திணைக்களம் மதிப்பிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகும் பாடசாலைகள்...!

நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகும் பாடசாலைகள்...!

மரணச் சான்றிதழ்

இந்த முயற்சியின் கீழ், பேரிடரால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் பதிவுச் சான்றிதழ்கள் இலவசமாகவும், ஒரு நாள் துரித சேவை மூலமாகவும் வழங்கப்படுகின்றன.

டிட்வா புயலினால் பிறப்பு சான்றிதழை இழந்த ஓரு மில்லியனுக்கு அதிகமானோர் | Birth Certificates Of Over A Mn People Destroyed

அத்துடன், மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களுக்கான மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசின் க்ளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் சில பகுதிகளில் நடமாடும் சேவைத் திட்டமும் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மூன்றாம் தவணைப் பரீட்சை : கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

மூன்றாம் தவணைப் பரீட்சை : கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

நடமாடும் சேவை

சான்றிதழ்கள் வழங்குவதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தேவையான ஆதரவை வழங்கி வருவதாகவும், சில சந்தர்ப்பங்களில் அரசாங்க சார்பற்ற நிறுவனங்களும் உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டிட்வா புயலினால் பிறப்பு சான்றிதழை இழந்த ஓரு மில்லியனுக்கு அதிகமானோர் | Birth Certificates Of Over A Mn People Destroyed

இதுவரை, கொட்டாவ மற்றும் கண்டி மாவட்டத்தில் நடமாடும் சேவைத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் இல்லாதவர்கள் குறித்த தரவுகளை மாவட்ட துணைப் பதிவாளர்கள் தற்போது சேகரித்து வருகின்றனர்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் இந்தப் பதிவேடுகளை வழங்கும் பணியை நிறைவு செய்யத் திணைக்களம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக பதிவாளர் நாயகம் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று சென்னை பறக்கும் தமிழ் அரசியல் பிரமுகர்கள் - முக்கிய சந்திப்புகள்

இன்று சென்னை பறக்கும் தமிழ் அரசியல் பிரமுகர்கள் - முக்கிய சந்திப்புகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025